May 18, 2025 - 10:08 AM -
0
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மெக்சிகோ கடற்படை பயிற்சி கப்பல் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணித்தனர்.
புரூக்லின் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பாலத்தின்மீது கப்பல் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பயணித்த 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உடனடியாக விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமத்துள்ளனர்.
இதில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

