May 18, 2025 - 11:21 AM -
0
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து 1,624,000 பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் மருதமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்டிருந்த மூன்று தங்க வளையல்கள், ஒரு பிரேஸ்லெட், இரண்டு தோடுகள் மற்றும் இரண்டு மோதிரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதமுனை 03 பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

