செய்திகள்
16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு - விசேட போக்குவரத்து திட்டம்

May 18, 2025 - 06:06 PM -

0

16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு - விசேட போக்குவரத்து திட்டம்
  • யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு நாளை (19) நடைபெறவுள்ளது. 

    இதன் காரணமாக பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

    இந்த நிகழ்வு பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

    குறித்த போக்குவரத்து திட்டம் கீழ்வருமாறு, 

    எந்தவொரு வீதியும் மூடப்படாது. நிகழ்வு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பொல்துவ சந்தியிலிருந்து ஜெயந்திபுர வழியாக கியயேம் சந்தி வரை பாராளுமன்ற வீதியில் கொழும்பிலிருந்து நுழையும் மற்றும் கொழும்புக்கு வௌியேறுவதற்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். 

    மாற்று வழிகள் 
     

  • கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல சந்திக்குச் சென்று, பின்னர் பாலம் துன சந்தியிலிருந்து கியயேம் சந்திக்குச் செல்ல வேண்டும்​. 
     

  • கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியயேம் சந்தியிலிருந்து பாலம் துன சந்தி வழியாக பத்தரமுல்ல சந்திக்கு பயணித்து, பின்னர் பொல்துவ சந்தி வழியாக கொழும்புக்குச் செல்லலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05