சினிமா
ஜிடி4 கார் பந்தயத்தில் அஜித்தின் கார் டயர் வெடித்து விபத்து

May 18, 2025 - 07:44 PM -

0

ஜிடி4 கார் பந்தயத்தில் அஜித்தின் கார் டயர் வெடித்து விபத்து

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. 

டயர் வெடித்ததை அடுத்து அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது. 

டயர் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் அஜித் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார். 

இந்த விபத்தில் நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

சமீப காலமாக அஜித் சர்வதேச கார் பந்தயங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05