May 18, 2025 - 08:07 PM -
0
இந்திய பிரீமியர் லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (18) இடம்பெற்ற 59ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 10 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியின் ஊடாக பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

