உலகம்
நைஜீரியாவில் 23 விவசாயிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

May 19, 2025 - 06:11 AM -

0

நைஜீரியாவில் 23 விவசாயிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்–கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர். 

போகோ ஹாரம் எனும் கொடூர கடத்தல் கும்பல்களும் நைஜீரியாவில் செயல்படுகின்றன. இதனால் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கும் நைஜீரியாவில் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர், அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தை சூறையாட முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவில் கிராம மக்கள் அசந்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில் கொள்ளை கும்பல் ஊடுருவியது. அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியது. 

கண்ணில் படுபவர்கள் மீது கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டி வீசியும் கொடூர தாக்குதல் நடத்தி அங்கிருந்த தானியங்கள், விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். 

இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50இற்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 

தகவலறிந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைய கைதிகளாகச் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05