உலகம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய்

May 19, 2025 - 06:34 AM -

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் தனது பதவிக்காலத்தை முடித்த பைடன், தற்போது தனது மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்து, பொருத்தமான சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அதிகரித்த சிறுநீர் அறிகுறிகளால் பைடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் விளைவாக, புரோஸ்டேட் முடிச்சு கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) எனக் குறிப்பிடப்பட்டது, இது நோயின் தீவிரமான வடிவத்தைக் குறிக்கிறது, மேலும் இது எலும்பிற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05