May 19, 2025 - 08:26 AM -
0
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
நேற்று (18) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் தொடரிலேயே ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

