May 19, 2025 - 12:08 PM -
0
நேற்று (18) டெல்லியில் நடைபெற்ற 60 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் அடித்திருந்த கே.எல்.ராகுல் தற்போது டெல்லி அணைக்கவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

