செய்திகள்
விசாரணைக்குழுவில் முன்னிலையானார் தேசபந்து!

May 19, 2025 - 02:40 PM -

0

விசாரணைக்குழுவில் முன்னிலையானார் தேசபந்து!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (19) விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.  

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று (19) குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதற்கமைய அவர் இன்றைய தினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05