May 19, 2025 - 04:17 PM -
0
நேற்று (18) டெல்லியில் நடைபெற்ற 60 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதன்மூலம் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் சென்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற முதல் அணி தலைவர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் படைத்துள்ளார்.
2019, 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணியை பிளேஆப் சுற்றுக்கும் ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார்.
பின்பு 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் கிண்ணத்தை ஷ்ரேயாஸ் பெற்றுக்கொடுத்தார்.
தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணியை பிளேஆப் சுற்றுக்கு ஷ்ரேயாஸ் அழைத்து சென்றுள்ளார்.

