May 19, 2025 - 04:59 PM -
0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இன்று (19) போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் இன்று உத்தரப்பிரதேசத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கும் 61 ஆவது லீக் போட்டியில் லக்னோ அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற காத்திருக்கும் லக்னோ அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில் லக்னோ அணியே 4 போட்டிகளில் வென்றுள்ளது. லக்னோ அணியை பிளே ஆஃப் வாய்ப்புக்கு முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் ஐதராபாத் அணி ஈடுபடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
புள்ளிப்பட்டியலில் தற்போது 10 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 7 ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் உள்ளது.

