சினிமா
வாடிவாசல் குறித்து வெற்றி மாறன்

May 19, 2025 - 07:29 PM -

0

வாடிவாசல் குறித்து வெற்றி மாறன்

இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

 

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார்.

 

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் வெற்றி மாறன் வாடிவாசல் திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பை பற்றி பேசியுள்ளார் அதில் அவர்,

 

'என்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் நான் தான் இயக்குகிறேன். படத்தின் மீதுள்ள மக்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் எடுக்கும் திரைப்படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். நான் என் படத்தை 100 சதவீதம் கமிட்மண்ட்டோடு தான் இயக்குகிறேன். என்னால் அதை மட்டும் தான் தரமுடியும்' என கூறியுள்ளார்.

 

வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05