May 20, 2025 - 08:30 AM -
0
உலகளாவிய ரீதியில் முதல் 1% ல் தரவரிசையில் உள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்த இலங்கையின் ஒரேயொரு நிறுவனமான Curtin University Colombo நிறுவனம், தனது பாடநெறியுடன் தொழில்துறையின் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் வகையில் உயர்கல்வியை மறுவரையறை செய்யும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இது விடயத்தில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு கணினிப் பிரிவின் இறுதியாண்டு மாணவர்கள் Aeturnum Lanka (Pvt) Ltd நிறுவனத்திற்கு அண்மையில் மேற்கொண்டிருந்த விஜயத்தின் மூலம் புலனாகின்றது. மாணவர்கள் தாம் மேற்கொள்ள வேண்டிய திட்டத்தின் ஓர் அங்கமாக உருவாக்கிய AI chatbot ஐ இங்கு காட்சிப்படுத்தியதுடன், நிறுவனத்தின் செயற்பாட்டுக்குத் தேவையான நேரடிப் பதிலை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருந்தது.
Computing Capstone Module (CCP) ஊடாக தொழில்துறையுடன் தொடர்புடைய திறன்களை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் Curtin University Colombo நிறுவனம் உறுதியாக உள்ளது என்பது முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குனரான Aeturnum நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மையின் மூலம் புலப்படுகின்றது. கல்விக்கான சிறப்பை நோக்கிய Curtin University Colombo இன் பயணத்தில் தொழில்துறையுடன் ஏற்படுத்தும் கூட்டாண்மை முக்கிய அம்சமாக அமைகின்றது. இது அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பணியிடச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாவால்களை மாணவர்கள் முன்னிலையில் வைக்கின்றது.
AI chatbot திட்டமானது மனித வளச் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இயற்கை மொழி முறையாக்கம் (Natural Language Processing) ஊடாக நிறுவன ஆவணங்களிலிருந்து பணியாளர்கள் தமது பதவி சார்ந்த தகவல்களை உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவுகின்றது. Microsoft SharePoint மற்றும் Office 365 ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் இதன் மூலம் வழங்கப்படும் தீர்வு பாதுகாப்பையும், பதவி சார்ந்த அணுகல்களுக்கான பௌதீக முயற்சிகளையும் குறைக்கின்றது. மாணவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் புதுமைக்கான ஒரு சான்றாக இது அமைகின்றது.
தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கல்விசார் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் Aeturnum இன் வினைத்திறனான மனித வளத் தேவைகளுக்கான தீர்வுகளை chatbot வழங்குவதுடன், ஸ்கானிங் மற்றும் பொழிப்பாக்கப்பட்ட ஆவணங்கள் SharePoint இல் சேமிக்கப்படுகின்றன. நிறுவன தர பாதுகாப்புடன் இணைய அடிப்படையிலான தீர்வை வழங்க AI கட்டமைப்புகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
Aeturnum போன்ற நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மாணவர்களுக்குத் தமது திட்டங்களை முன்னெடுக்கத் தைரியத்தை வழங்கும் என்றும், தொழில்வழங்குனர்களை ஈர்க்கக்கூடிய பகுதிகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் Curtin University Colombo நம்புகிறது. Computing Capstone Module (CCP) இற்கு மேலதிகமாக வேகமான நடைமுறைகள், கூட்டுக் குறியீட்டு முறை மற்றும் வாடிக்கையாளர் முகாமைத்துவம், இலங்கையின் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முக்கியமான திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் இது முக்கிய பங்காற்றுகின்றது. இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் குழுவில் நெசித் ஹேசர நெத்மித லியனகே, யசித் தேவங்க தர்மசேன, சஹிரு எல்விட்டிகல, லியோன் பீட்டர்சன் மற்றும் ஃபாத்திமா அஹமட் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் Curtin University Colombo இன் கீதாஞ்சலி விமலரத்ன மற்றும் தரிந்து தர்மசேன ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டனர். குழுவின் பணி எதிர்கால திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இந்த மாணவர்களுக்கு Aeturnum நிறுவனத்தின் பொறியியல் பணிப்பாளர் குஷான் யாப்பா, பிரதம மென்பொருள் வடிவமைப்பாளர் லசித வீரசிங்க, சிரேஸ்ட திட்ட முகாமையாளரும் கற்றல் சிறப்பு முகாமையாளருமான சந்தன வீரசூரிய மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் பியால் பெர்னான்டோ உள்ளிட்ட துறைசார் நிபுணர்களிடமிருந்து தொழில்துறை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

