May 20, 2025 - 08:38 AM -
0
மோனிக் குழும நிறுவனங்கள் உலகப் புகழ்பெற்ற வால்டன் வீட்டு உபகரணங்கள் மற்றும் மின்னணு பொருட்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த அறிமுகத்துடன், இலங்கை நுகர்வோருக்கு மலிவு விலையில், உயர் தரமான, உலகளவில் சான்றளிக்கப்பட்ட பொருட்களை சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் எளிதான கடன் வசதிகளுடன் கொள்வனவு செய்யலாம்.
1977ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட வால்டன், 2008 முதல் சொந்த உற்பத்தியை ஆரம்பித்து உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. இன்று, வால்டன் தரம், மலிவு விலை மற்றும் புதுமைக்கு பெயர் பெற்று, குளிர்சாதன பெட்டிகள், உறைவிப்பான்கள், குளிரூட்டிகள், அமுக்கிகள், தொலைக்காட்சிகள், மின்சார உபகரணங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் பொருட்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதோடு, 30,000 இற்கும் மேற்பட்ட திறமையான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்நிறுவனம் பங்களாதேஷில் 700 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்த 22 நவீன உற்பத்தி தளங்களை கொண்டுள்ளது.
மோனிக் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் முகாமைத்துவ இயக்குநருமான கலாநிதி வாசல மதுவந்த ஆரியபால மோனிக் குழுமத்தில், சந்தையில் உண்மையான தேவைகளை கண்டறிந்து சரியான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கை சந்தையில் நம்பகமான, உயர்தர வீட்டு உபகரணங்கள் மலிவு விலையிலும், நல்ல விற்பனைக்கு பிந்தைய சேவையுடனும் கிடைப்பதில் பாரிய இடைவெளி இருப்பதை நாங்கள் கவனித்தோம். அதனால்தான் வால்டனை இலங்கைக்கு கொண்டு வர முடிவு செய்தோம். வால்டன் உலகளவில் மதிக்கப்படும் நிறுவனமாகும், இது நீடித்து நிலைக்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட, உலகத்தரம் வாய்ந்த பொருட்களுக்கு பெயர் பெற்றது. எங்கள் வலுவான நிதித்துறை அடித்தளத்தால், இலங்கை வாழ் வாடிக்கையாளர்கள் இந்த தரமான பொருட்களை எளிதாக வாங்குவதற்கு வசதியான கட்டணத் திட்டங்களை வழங்குவோம். மேலும், விற்பனைக்குப் பிந்தைய சேவையை வீட்டு வாசலுக்கே வழங்கவும், மோனிக் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் buymonik.lk இணையதளம் வழியாக வால்டனின் அனைத்து பொருட்களையும் இலங்கை முழுவதும் கிடைக்கச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். என கூறினார்.
வால்டன் மேம்பட்ட ஜெர்மன் பொறியியலை ஒருங்கிணைக்கிறது, இது தெற்காசியாவின் மாறுபட்ட காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் அனைத்து தயாரிப்புகளின் மேம்பட்ட செயல்திறனையும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையையும் உறுதி செய்கிறது. அனைத்து உற்பத்திகளும் பங்களாதேஷில் மேற்கொள்ளப்படுகின்றன, இது இலங்கை நுகர்வோரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை தனிப்பயனாக்க உதவுகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை கொண்டுள்ளது, இதில் ISO 9001:2015 தர மேலாண்மைக்காகவும், ISO 14001:2004 சுற்றுச்சூழல் மேலாண்மைக்காகவும், OHSAS 18001:2007 தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காகவும் அடங்கும்.
வால்டன் ஹை-டெக் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் அப்துர் ரவுப் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை சந்தையில் வால்டன் நுழைவது எங்களுக்கு பெருமையான தருணம். வால்டன் எப்போதும் உயர்ந்த தரம், புதுமையான மற்றும் மலிவு விலையில் உபகரணங்களை வழங்கி வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் பங்களாதேஷில் தயாரிக்கப்படுகின்றன, இது இலங்கை வாடிக்கையாளர்களின் பயன்பாடு, மின்னழுத்தம் மற்றும் காலநிலை தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை வடிவமைக்க உதவுகிறது.
மோனிக் குழும நிறுவனங்கள் பதுளையை தளமாகக் கொண்டவை மற்றும் மோனிக் இன்டர்நேஷனல், மோனிக் வோட்டர், மோனிக் ஹோம்ஸ், மோனிக் ஓட்டோ கேர், மோனிக் கெபிடல் ஹோல்டிங்ஸ் மற்றும் மோனிக் டிரேடிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலங்கை முழுவதும் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட 50இற்கும் மேற்பட்ட கிளைகளுடன், இந்த குழுமம் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆக்கபூர்வமான தீர்வுகள் மூலம் நேர்மறையான சமூக மாற்றத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

