May 20, 2025 - 04:31 PM -
0
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பல வெளிநாட்டு வீரர்களும், சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதால் அவர்களால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்கும் சூழல் இல்லாமல் உள்ளது.
மும்பை அணியிலிருந்து வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகிய வீரர்கள் பிளேஆஃப்ஸ் சுற்றில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கிடையில் சர்வதேச தொடர் இருப்பதால், வில் ஜேக்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இருப்பதால் ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் வெளியேறுகிறார்கள்.
இந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்கா ஆகிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார்கள். ஜானி பேர்ஸ்டோவ் இதற்கு முன்னர் பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஜானி பேர்ஸ்டோவை ரூ.5.25 கோடிக்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ரியான் ரிக்கில்டனுக்கு பதிலாக ரிச்சர்ட் க்ளீசன் ரூ.1 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கார்பின் போஷ்க்கு பதிலாக ரூ.75 லட்சத்தில் சரித் அசலங்க ஒப்பந்தமாகியுள்ளார்.

