May 20, 2025 - 05:28 PM -
0
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மே 17ஆம் திகதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பல வெளிநாட்டு வீரர்களும், சர்வதேச தொடர்கள் இருப்பதால், ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அது பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இந்த நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும், பிளேஆஃப் செல்ல முடியாது என்பதாலும், சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாலும், சென்னை அணியின் 3 முக்கிய வீரர்கள் அணியில் இணையமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவில்லை. இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களையும் சென்னை அணி ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

