May 20, 2025 - 07:08 PM -
0
2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ராகு மே மாதம் 18 ஆம் திகதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் திகதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.
ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷம் ராசி பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு குரு 2 ஆம் இடத்தில் 3 ஆம் இடத்துக்கும், 11 ஆம் இடத்தில் ராகு பகவானும், 5 ஆம் இடத்தில் கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்.
அமோகமான வேலைவாய்ப்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். வீடு கட்டுவது, வீடு, இடம் வாங்க லோன் கிடைக்கும். உங்கள் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு போவார்கள். நல்லவர்கள் சேர்ந்து இருப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
நண்பர்கள் விரோதியாகவும், விரோதிகள் நண்பர்களாகவும் மாறும் வாய்ப்புண்டு. சிறு பிராயணம், தூர பிராயாணம், பேசும் வார்த்தைகளால் ஆதாயம் உண்டாகும். எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியை உண்டாக்கும். நினைத்த காரியங்கள் நடக்காது. சோதனைகளுக்குப் பிறகு சாதனைகள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சோஷியல் மீடியாவில், புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நட்பு விரோதத்தை உண்டாக்கும். அவர்களால் பிரச்சனை உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு.
குடும்பத்திற்குள் பிரிவினைகள் ஏற்படும். சச்சரவுகள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். பெரிய பாதிப்புகளில் இருந்து உங்களை காத்தருளும். குலதெய்வ வழிபாடு ராகு கேதுவின் தாக்கத்தையும், குருவால் வரும் பிரச்சனைகளையும் தடுத்து உங்களைப் பாதுகாக்கும்.