May 20, 2025 - 07:23 PM -
0
ஸ்பெயின் நாட்டில் இன்று (20) மிகப்பெரிய அளவில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான பிராந்தியங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை அடியோடு முடங்கியது. அவசர சேவை தொடர்புகளும் செயல் இழந்ததால் மக்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் மிகப்பெரிய அளவில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான பிராந்தியங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
அவசர சேவை தொடர்புகளும் செயல் இழந்தது. இதனால், எமர்ஜென்சி உதவி கேட்டு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டவர்களுக்கும் தொடர்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஸ்பெயினில் இன்று அதிகாலை இந்த தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ஏற்பட்டது. ஸ்பெபெயினில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிகா தனது நெட்வொர்க் மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இன்று ஏற்பட்ட தொலைத்தொடர்பு சேவை முடக்கத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பைஃபர் கனெக்டிவிட்டி சேவை கூட பாதிக்கப்பட்டதாக பல பயனர்களும் தெரிவித்தனர். ஸ்பெயின் அவசர உதவி அழைப்பு எண்ணான 112 முடங்கியதையடுத்து, மாற்று எண்கள் அறிவிக்கப்பட்டன.
ஸ்பெயினில் தொலைத்தொடர்பு சேவையில் மோவிஸ்டார், ஆரஞ்ச், வோடோஃபோன், டிஜிமொபில், ஓ2 உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்கள் மொபைல் இணைய சேவை கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மாட்ரிட், பார்சிலோனா, செவிலே, வலேனிகா உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களிலும் இணைய சேவை பாதிக்கப்பட்டது. மொபைல் சிக்னல்கள் முடங்கியதால் யாருக்கும் செல்போன் அழைப்புகளோ, மெசேஜ், மொபைல் டேட்டா என எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக பயனர்கள் கூறினர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஸ்பெயினில் மிகப்பெரிய அளவில் மின் தடை ஏற்பட்டது. அதாவது, கடந்த மாதம் 28 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடையால் ஸ்பெயின் ஸ்ம்தம்பித்தது. மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நின்றன. சுரங்க பாதைகளிலும் ரயில்கள் நின்றதால், ஸ்பெயின் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் நடைபெற்ற மூன்று வாரங்களில் மீண்டும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

