May 21, 2025 - 08:32 AM -
0
தொழில்நுட்ப புத்தாக்க சிந்தனையாளர்களின் அடுத்த தலைமுறைக்கு உத்வேகமளிக்கும் வகையில், ஹட்ச் நிறுவனம், தனது Future Connect முயற்சியினூடாக தொழில்துறை- கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. SLIIT உடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக, மாணவர்களுக்கு யதார்த்த உலகின் அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பது மாத்திரமன்றி, நேரடியான, ஆழமான கற்றல் அனுபவங்களினூடாக networking, cloud infrastructure மற்றும் தரவு தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் பட்டதாரி மாணவர்களின் ஈடுபாட்டையும் ஹட்ச் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கின்றது.
Future Connect நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது அமர்வு, பெப்ரவரி 21 அன்று SLIIT Malabe campus ல் இடம்பெற்றதுடன், Networking, Computer Systems, மற்றும் Cloud Infrastructure Management போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. ஹட்ச் நிறுவனத்தின் பிரதம தகவல் அதிகாரி அசங்க ரணசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் Networking, Computer Systems, Cloud Infrastructure management போன்றவற்றில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்த ஆழமான அறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் கல்விக்கும், வேலை செய்யும் இடத்தில் காணப்படும் எதிர்பார்ப்புக்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப உதவும் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த அமர்வைத் தொடர்ந்து, Future Connect நிகழ்ச்சித்திட்டத்தின் தொழிற்துறை விஜயமானது ராகம, வல்பொல என்ற இடத்திலுள்ள ஹட்ச் பொறியியல் வளாகத்தில் பெப்ரவரி 26 அன்று இடம்பெற்றது. இந்த விஜயத்தின் போது Network Operations Center (NOC), Data Centers, மற்றும் Battery Rooms உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்பு பாகங்கள் குறித்த நேரடி அனுபவங்களை மாணவர்கள் பெற்றுக்கொண்டதுடன், இடைவிடாத வலையமைப்பு செயற்திறனை உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பிலும் நேரடியாக ஆராய்ந்து அது குறித்த அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹட்ச் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “தொழிற்துறை குறித்த ஆழமான அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றை வழங்கி, தொழில்நுட்ப துறை சார்ந்தவர்களின் அடுத்த தலைமுறையை வளர்ப்பதில் ஹட்ச் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. Future Connect போன்ற முயற்சிகள் மூலமாக, பட்டதாரி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை நாம் மேம்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையின் டிஜிட்டல் பரிணாம மாற்றத்தை முன்னெடுப்பதற்கு உயர் திறன் கொண்ட தொழிற்படையை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்திற்கு ஏற்றவாறான தொழிற்படையைக் கட்டியெழுப்புவதில் ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த அமர்வுகள் மீளவும் உறுதிப்படுத்துவதுடன், தொடர்ந்தும் பரிணாம வளர்ச்சி கண்டுவருகின்ற இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் கேள்விகளை பூர்த்தி செய்வதற்கு நன்கு தயார்படுத்தப்பட்ட மாணவர்களை நாம் கொண்டிருப்பதையும் உறுதி செய்கின்றது. தொழிற்துறை-கல்வித்துறை இடையில் வலுவான ஒத்துழைப்புக்களை வளர்க்கும் வகையில், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தொழில்ரீதியில் அடுத்த தலைமுறையினரை வளர்ப்பதில் ஹட்ச் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றது.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.
சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

