May 21, 2025 - 08:54 AM -
0
நம்பிக்கையின் இதயபூர்வமான கொண்டாட்டமாக, Make-A-Wish® Sri Lanka, Make-A-Wish International இன் உரிமம் பெற்ற பிரதேசமாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதை கொண்டாடுகிறது. உலகளாவிய ரீதியாக Make-A-Wish இயக்கத்தின் உருவாக்கத்தின் 45 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த அறிமுகம் World Wish Day உடன் ஒத்துப்போகிறது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் ஒரு சேவையாக, Make-A- Wish Sri Lanka, நம்பிக்கை மற்றும் வலிமையை ஊக்குவிக்கும் மனப்பூர்வமான விருப்பங்களை வழங்குவதன் மூலம் கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டுள்ளது.
சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு சிகிச்சையின் ஒரு அங்கமாக அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் நன்மைகளை ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு ஆசை நிறைவேற்றப்படும்போது அது, உடல், மனம் மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதோடு நம்பிக்கையையும் தூண்டுவதாகக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், 97% விருப்பச் சிறுவர்களும், 95% பெற்றோர்களும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தகுதியுள்ள பிள்ளைக்கும் ஒரு விருப்ப அனுபவம் முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
Make-A-Wish International இப்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ளது. அதன் ஆரம்பம் முதல், Make-A-Wish உலகளவில் 615,000க்கும் மேற்பட்ட விருப்பங்களை நிறைவேற்றி சிறுவர்களதும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. எங்கள் உலகளாவிய குடும்பத்திற்கு Make-A-Wish Sri Lanka வை வரவேற்பதுடன் ஆசியாவில் எங்கள் இருப்பை விரிவுபடுத்த உள்ளூர் தொண்டு நிறுவனமான இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் கைகோர்ப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என Make-A-Wish Internationalஇன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி லூசியானோ மான்சோ தெரிவித்தார். அவர் மேலும், ஒவ்வொரு புதிய பிரதேசமும், விருப்பத்தின் மாற்றும் சக்தி தேவைப்படும் இன்னும் அதிகமான சிறுவர்களைச் சென்றடைய அனுமதிக்கிறது. இந்த ஆரம்பம், உள்ளூர் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஒரு விருப்பத்தின் தாக்கத்தை நம்பும் பங்காளர்களின் அளவற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ஒன்றாக, எம்மால் இலங்கையில் கடுமையான நோய்களை எதிர்கொள்ளும் சிறுவர்களின் பிள்ளைப் பருவத்தை மீட்டெடுக்க முடியும். என்றார்.
விருப்பங்கள் சக்திவாய்ந்த மருந்தாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதன் ஊடாக நாங்கள் புன்னகையை உருவாக்குவது மட்டுமல்லாமல் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறோம். என இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் இலங்கை இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் போஷகருமான(patron) அபிமன்ய திரு. கரு ஜயசூரிய தெரிவித்தார். அவர் மேலும், Make-A-Wish Sri Lanka வின் அறிமுகம் எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். மேலும் இந்த தைரியமான சிறுவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் விருப்பங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.
1. Roberts, H., Cook, J., Lee, A., Loh, W. K., Teo, N., Yoong, J. S. Y., & Gorter-Stam, M. (2024). Wish-granting interventions promote positive emotions in both the short and long term in children with critical illnesses and their families. Children, 12(1), 47. https://doi.org/10.3390/children12010047 வங்கிப் பங்குதாரராகவும் இந்த முயற்சியுடன் இணைந்த முதல் பெருநிறுவனமுமான செலான் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், “அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், எங்கள் ஒவ்வொரு முயற்சியும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதை இலக்காகக் கொண்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் Make-A-Wish Sri Lanka வுடனான எங்கள் இணைவு, இந்த திசையில் ஒரு முக்கிய படியாகும். ஏனெனில் சிறுவர்கள் கடுமையான நோய்களை எதிர்த்துப் போராடும்போது, இது முழு குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்கிறது. இந்தப் பயணத்தில் நாங்கள் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் இந்த சிறுவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், அவர்களின் கைகளைப் பிடித்து அவர்களின் விருப்பங்கள் கேட்கப்படுகிறது மற்றும் அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும். ” என்றார்.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை, முழுமையான மருத்துவ பராமரிப்பு, உணர்வுபூர்வ ஆதரவு மற்றும் வளங்கள் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. Make-A-Wish Sri Lanka வை ஒரு சேவையாக சேர்ப்பதன் மூலம், சவாலான சிகிச்சை கட்டங்களில் முக்கியமாகக் கருதப்படும் உளவியல் மேம்பாட்டை வழங்கும் திறனை மேம்படுத்த அவர்கள் எண்ணி உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். Make-A- Wish பல்நோக்கு அறையின் கட்டுமானத்தில் அவர்களின் தாராளமான நிதி உதவிக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இச் சிறப்பிடம் இப்போது விருப்பங்களை நிறைவேற்றுதல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், ஆலோசனை மற்றும் விளையாட்டு மூலமான சிகிச்சை மற்றும் குடும்ப ஈடுபாடு ஆகியவற்றிற்கான மையமாக செயல்பட்டு கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நம்பிக்கை, தைரியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.
ஒன்றாக, நாங்கள் ஒரு அறையை அல்ல, கனவுகள் வடிவம் பெற்று நீடித்த நினைவுகள் தொடங்கும் ஒரு இடத்தை உருவாக்கியுள்ளோம். என்றார் லயன்ஸ் மாவட்டம் 306B2 2021 = 2022 மாவட்ட ஆளுநர், இந்திரா கௌஷல் ராஜபக்ஷ. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையில், ஏப்ரல் 29, அன்று நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் விருப்பங்களின் முக்கியத்துவத்தையும் கூட்டு நல்லெண்ணத்தின் சக்தியையும் எடுத்துக்காட்டும் செயற்பாடுகளில் பங்கேற்க குடும்பங்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந் நிகழ்வில், Make-A-Wish Sri Lanka வின் முதல் விருப்பச் சிறுவர்களின் ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதன் தாக்கம் குறித்த கல்வி அமர்வுகள் ஆகியவற்றுடன் சமூக பங்கேற்பிற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.
தனக்கு பிடித்த உள்ளூர் பாடகரும் 2023 ஹிரு ஸ்டார் வெற்றியாளருமான அமிஷ மினோலை சந்திக்க வேண்டும் எனும் தனது விருப்பத்தை நனவாக்கிய 8 வயது ரசிந்து சந்தருவன், விருப்பத்தை முதலில் நிறைவேற்றிய சிறுவர்களில் ஒருவர் ஆவார். இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் கீழ் Make-A-Wish Sri Lanka வை ஒரு முக்கிய சேவையாக ஒருங்கிணைப்பதன் மூலம் புற்றுநோயை எதிர்கொள்ளும் சிறுவர்களின் மருத்துவ மற்றும் உளவியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு பரந்த பராமரிப்பு மாதிரியை உருவாக்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் எனும் பொதுவான குறிக்கோளை நோக்கி ஒன்றிணைந்து செயற்படுதல், குடும்பங்களுக்கு நம்பிக்கையை அளிப்பதுடன் சமூக உறவுகளையும் வலுப்படுத்துகிறது.
Make-A-Wish Sri Lankaவை ஆதரிக்கவும் மற்றும் நீங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றி மேலும் அறியவும் www.makeawishsrilanka.orgஐப் பார்வையிட்டு அவர்களின் சமூக வலைத்தளங்களை பின்தொடரவும்.
உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக செலான் வங்கி, World Wish Dayஇன் போது Make-A-Wish International இன் உரிமம் பெற்ற பிரதேசமாக Make-A-Wish Sri Lanka வை அறிமுகப்படுத்துகிறது.
செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியான ரமேஷ் ஜயசேகர தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் Make-A-Wish Sri Lanka வின் முதல் உள்ளூர் மைல்கல்லைக் கொண்டாடுகிறார்.
Make-A-Wish International தொடர்பாக
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் விருப்பங்களை Make-A-Wish உருவாக்குகிறது. 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Make-A-Wish, சிறுவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் உலகின் முன்னணி அமைப்பாகும். இது உலகளாவிய ரீதியாக கிட்டத்தட்ட 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 615,000க்கும் மேற்பட்ட விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது. ஒவ்வொரு 25 செக்கன்களுக்கும், ஒரு சிறுவன்/சிறுமிக்கு ஒரு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த பிள்ளை ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள தகுதி பெறுகிறார். ஒரு தீவிர நோய் கண்டறிதலால் திருடப்பட்ட பிள்ளைப் பருவத்தை மீட்டெடுக்கும் ஆற்றலை விருப்ப அனுபவங்கள் கொண்டிருப்பதுடன் அவை உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்தும். தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், ஊழியர்கள் மற்றும் உலகம் முழுவதும் 27,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் சேர்ந்து, சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் சக்தியை Make-A-Wish கொண்டு வருகிறது. Make-A-Wish International பற்றிய மேலதிக தகவலுக்கு, worldwish.org ஐப் பார்வையிடவும்.

