May 21, 2025 - 09:01 AM -
0
நாட்டின் ஆயுள் காப்புறுதி சந்தைத் துறையில் தலைமை வகிக்கும் செலிங்கோ லைஃப்பின் அனுசரணையில் 1000ற்கு மேற்பட்ட பெரியவர்களும் சிறுவர்களும் இலங்கையில் மிகவும் பிரபலமான பேர்ல் பேயில் ஒன்று கூடி ஒரு நாளைக் குதூகலமாக களித்தனர்.
கேளிக்கை பூங்கா அவர்களுக்காகவே பிரத்தியேகமாக முன்பதிவு செய்யப்பட்டதால், இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தக் குடும்பங்கள், செலிங்கோ லைஃப்பின் காப்புறுதிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் குடும்ப சவாரி மெகா ஊக்குவிப்பு திட்டத்தின் வெற்றியாளர்கள் அனைவரும், பேர்ல் பேயில் உள்ள நீர் பூங்கா பகுதியில் சவாரிகள், சறுக்குகள் போன்றவற்றில் ஈடுபட்டதுடன் மற்றும் நடவடிக்கைகளிலும் மறக்கமுடியாத வகையில் அந்த நாளைக் கழித்தனர்.
250 செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளடக்கிய இந்தக் குழுவில், குடும்ப சவாரிக்கான வர்த்தக நாம தூதுவர்களான பிரபல நடிகர் ரோஷன் ரணவான, அவரது மனைவி குஷ்லானி மற்றும் அவர்களது மகன் மினெத் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய செலிங்கோ லைஃப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு. சமித ஹேமசந்திர, குடும்ப சவாரி ஊக்குவிப்பு திட்டமானதுஇ கடந்த 18 ஆண்டுகளாக இதே போன்ற சுற்றுலா மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளில் ஆயிரக்கணக்கான செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது என்றார். இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பாரிய மற்றும் மிகவும் தாராளமான ஊக்குவிப்பு திட்டம் இதுவாகும், எனவும் அவர் கூறினார். குடும்ப சவாரியானது காப்புறுதிதாரர்களுக்கு வெகுமதி அளிப்பதையும் கடந்து, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களிடையே நீடித்த உறவுகளை உருவாக்க உதவுவதுடன் புரிதல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பேல் பேயிற்கு ஒரு நாள் பயணத்தை வென்ற 250 காப்புறுதிதாரர்களைத் தவிர, ஐந்து செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர் குடும்பங்கள் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய விடுமுறையை சீனாவிலும் மேலும் 10 குடும்பங்கள் மலேசியாவிலும் கழிப்பதற்கான வாய்ப்பினை வென்றுள்ளன. இந்த சுற்றுப்பயணங்கள் முறையே மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும். மொத்தத்தில், 1,060 தனிநபர்களைக் கொண்ட 265 செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் 18ஆவது குடும்ப சவாரிக்கான வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.

