சினிமா
இப்போ மட்டும் பேட்டி கொடுப்பது ஏன் தெரியுமா?

May 21, 2025 - 10:44 AM -

0

இப்போ மட்டும் பேட்டி கொடுப்பது ஏன் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு முழுவதும் கார் பந்தயங்களில் கலந்து கொள்வது என முடிவு செய்திருக்கிறார் அஜித் குமார். இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் குமார் மீண்டும் கார் பந்தயங்கள் பக்கம் கவனம் திருப்பியது குறித்து அனைத்து தரப்பு ரசிகர்களும் பேசி வருகிறார்கள்.

 

மேலும் பந்தயம் நடக்கும் இடங்களில் எல்லாம் அஜித் குமாரை பார்க்க ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் கூடுகிறது. வெளிநாடுகளில் தான் கார் பந்தயங்கள் நடக்கிறது என்றாலும் அஜித்துக்காக கூட்டம் கூடிவிடுகிறது. அதை பார்த்து கார் பந்தயங்கள் நடத்தி வருபவர்கள் ஆச்சரியமாக பேசுகிறார்கள்.

 

கார் பந்தயம் நடக்கும்போது கமெண்ட்ரியிலும் அஜித் குமாருக்காக கூட்டம் கூடுவது பற்றி பேசப்படுகிறது. கார் பந்தயங்களில் கலந்து கொள்ளத் துவங்கிய பிறகு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜித். அது பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

 

பல ஆண்டுகளாக பேட்டிகள் கொடுக்காமல் இருந்து வந்தார் அஜித் குமார். அவரை படங்களில் மட்டுமே பார்க்க முடியும். பட நிகழ்ச்சிகளுக்கோ, விருது விழாக்களுக்கோ வர மாட்டார். இது அஜித் குமாரை பற்றி தெரிந்த அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது மீண்டும் பேட்டிகள் கொடுப்பது வியப்பாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.

 

இந்நிலையில் கார் பந்தயத்திற்காக வெளிநாட்டில் அஜித்திடம் பேட்டி எடுத்தவரோ, நீங்கள் எங்களுக்கு பேட்டி கொடுப்பதற்காக நன்றி.நீங்கள் பேட்டியே கொடுக்க மாட்டீர்கள். உங்களின் நடிக்கும் படங்களுக்காக கூட பேட்டி கொடுக்காத நீங்கள் எங்களுக்கு பேட்டி அளிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என கேட்டார்.

 

அதற்கு அஜித் குமார் தெரிவிக்கையில்,

 

நான் இதை குட் ஸ்பிரிட்ஸில் சொல்கிறேன். இந்தியாவில் அரசியல், படங்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மீடியா எக்ஸ்போஷர் கிடைக்கிறது. ஆனால் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு அப்படி இல்லை. அதனால் மோட்டார்ஸ்போர்ட்ஸ் குறித்து நான் பேசினால் என் நாட்டில் இந்த ஸ்போர்ட்ஸ் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன் என்றார்.

 

அஜித் குமார் சொல்வது உண்மை தான். அவர் கார் ரேஸ் பற்றி தொடர்ந்து பேட்டி அளித்து வருவதால் அது குறித்து இந்தியாவில் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நான் டாக்டர் ஆவேன், என்ஜினியர் ஆவேன், கிரிக்கெட் வீரர் ஆவேன் என்று கூறி வருபவர்களுக்கு மத்தியில் அஜித் குமார் மாதிரி கார் ரேஸர் ஆவேன் என்று சொல்லத் துவங்கியிருக்கிறார்கள். இது தான் அஜித் குமாரின் பவர் என்கிறார்கள் ரசிகர்கள்.

 

சினிமா கெரியரை பொறுத்தவரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்துகிறார் அஜித் என தகவல் வெளியாகி தீயாக பரவியது.

 

அரசியலுக்காக நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் விஜய். அப்படி இருக்க கார் ரேஸுக்காக இனி படங்களில் நடிக்க மாட்டாரா அஜித் என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் சினிமாவை விட்டு விலகவில்லை என தெரிவித்துள்ளார். தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் துவங்கும் என்றும், ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் என்றும் தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

Comments
0

MOST READ