விளையாட்டு
சிஎஸ்கேவை விட்டு வெளியே போங்க!

May 21, 2025 - 01:37 PM -

0

சிஎஸ்கேவை விட்டு வெளியே போங்க!

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ந்து சொதப்புவதால் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது என்பது இதுவே முதல் முறையாகும். 

 

அது மட்டுமில்லாமல் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்துடன் நிறைவு செய்யும் நிகழ்வு இதுவே முதல் முறை. ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே அணி 10 ஆவது போட்டியில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், தொடர்ந்து தவறு செய்வதை நிறுத்துங்கள்.

 

உண்மையை ஒப்புக்கொண்டு அணியை விட்டு விலகிச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். தோனிக்கு வயதாகிவிட்டது. அவரிடம் இருந்து இனி பெரியதாக எதிர்பார்ப்பது என்பது தவறு. அதே சமயம் வயதாகியும் தொடர்ந்து பேட்டிங்கிற்கு வந்து தவறு செய்வது என்பதும் சரியான விஷயம் கிடையாது.

 

உங்களால் செய்ய முடியவில்லை என்றால் என்னால் முடியவில்லை என்று சொல்லிவிட்டு விலகிச் செல்வதுதான் நல்லது. ஆனால் இந்த முடிவை தோனி தான் எடுக்க வேண்டும். இல்லை நான் தொடர்ந்து விளையாடுவேன் என்று தோனி நினைத்தால், அவர் என்ன ரோலில் விளையாடுவார். கேப்டனாக இருப்பாரா? இல்லை விக்கெட் கீப்பராக இருப்பாரா? இல்லை சினிஸராக இருப்பாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தோனிக்கு வயது மூப்பால் உடல் தகுதியில் பிரச்சனைகள் இருக்கின்றது. அவருடைய முட்டி முன்பு போல் இல்லை. உடல் தகுதி அனைத்தும் குறைந்து கொண்டே இருக்கின்றது. அதே சமயம் தற்போது அணியின் டாப் ஆர்டரும் சரியாக விளையாடுவதில்லை. சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கிய பிரச்சினையே தோனி தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவதுதான்.

 

தோனி களத்திற்கு வந்தாலே சுழற் பந்துவீச்சாளர்கள் அவரை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார்கள். ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடும் போது தோனி மைதானத்தில் பார்வையாளர்களின் 10 வரிசை தாண்டி பந்தை அடிப்பார். ஆனால் தற்போது அவர் தடுமாறுகிறார் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார் சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தை மே 25ஆம் தேதி அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05