சினிமா
எத்தனை லட்சம் தெரியுமா?

May 21, 2025 - 01:55 PM -

0

எத்தனை லட்சம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான் பெரியதாக பேசப்பட்டு வருகிறது.

 

ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். சொந்த பிரச்சனையை அவர்களே பேசி முடிக்காமல் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொது பிரச்சனையாக்கிவிட்டனர்.

 

ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் என பேசப்படும் பாடகி கெனிஷாவும் தனது இன்ஸ்டாவில் சில பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளார்.

 

விவாகரத்து பிரச்சனை பரபரப்பாக போக ஆர்த்தி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார், ஜுன் 12 ஆம் திகதிக்குள் பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05