May 21, 2025 - 09:49 PM -
0
நானுஓயா - அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

