May 22, 2025 - 08:23 AM -
0
VIMAN Ja-Ela செயற்திட்டத்தில் அடுக்குமனைகளை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்களை வழங்குவதற்காக, இலங்கையில் உள்ள மிகவும் நம்பிக்கைக்குரிய வங்கிகளுள் ஒன்றான செலான் வங்கி பிஎல்சியுடன் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டாண்மை குறித்து John Keells Properties பெருமையுடன் அறிவித்துள்ளது. நாட்டில் மிகவேகமாக அபிவிருத்தி கண்டு வருகின்ற புறநகர்ப் பகுதிகளில் ஒன்றில் தரமான வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகின்ற குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் வீடொன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, சிறந்த சிக்கனத்துடனும், எளிதாகவும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு இக்கூட்டாண்மை வழிவகுக்கும்.
இந்த ஒத்துழைப்பு குறித்து John Keells Properties ன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள் தமது வீட்டுக்கனவை நனவாக்கிக் கொள்ள மகத்தான நெகிழ்திறன் மற்றும் சௌகரியம் மிக்க வழியில் கடனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்து, செலான் வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். VIMAN Ja-Ela செயற்திட்டமானது வெறுமனே ஒரு வீடமைப்பு நிர்மாணம் என்பதற்கும் அப்பாற்பட்டது, இது இயற்கை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றைச் சூழ, மிகவும் கவனமாகத் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு சமூகமாகும். இலங்கை மக்கள் கூடுதலாக எண்ணிக்கையில் அழகிய இல்லத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதை இக்கூட்டாண்மை உறுதி செய்வது மாத்திரமன்றி, நிலைபேற்றியல், போக்குவரத்து, மற்றும் சௌகரியம் ஆகியவற்றை வரையறுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகும்,” என்று குறிப்பிட்டார்.
தனிநபர் வங்கிச்சேவையைப் பொறுத்தவரையில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் புத்தாக்கத்தில் செலான் வங்கி இடைவிடாது கவனம் செலுத்தியுள்ளது. வீடமைப்பு சார்ந்த வலுவான தீர்வுகள் வரிசை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்த ஆழமான அறிவு, ஆகியவற்றுடன் செழுமையான நிதியியல் அனுபவத்தை இக்கூட்டாண்மைக்கு வங்கி சேர்ப்பிக்கின்றது. செலான் வங்கியின் தனிநபர் வங்கிச்சேவைக்கான பிரதிப் பொது முகாமையாளர் இயூஜின் டி அல்விஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தமது அபிலாஷைகளுக்கு ஏற்ற இல்லமொன்றை இலங்கை மக்கள் அனைவரும் கொண்டிருக்க வாய்ப்பளிக்க வேண்டுமென செலான் வங்கி உறுதியாக நம்புகின்றது.
John Keells Properties உடனான எமது கூட்டாண்மை அந்த நோக்கத்துடன் சிறப்பாக ஒன்றியுள்ளது. VIMAN Ja-Ela நிர்மாணச் செயற்திட்டத்தில் எதிர்காலத்தில் வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் நம்பிக்கையுடன் துணையுடன், இலகுவான, நெகிழ்திறன் மிக்க, மற்றும் சிக்கனமான கடன் தீர்வுகளுக்கு நாம் வழிவகுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த நிலப்பகுதியில் 60% க்கும் மேற்பட்ட பங்கு திறந்தவெளி வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டு, ஆறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் VIMAN Ja-Ela என்ற தனித்துவமான குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டம் அமைந்துள்ளது. அழகிய பூந்தோட்டங்கள் மற்றும் சமூக செயற்பாடுகளுக்கான இட வசதிகளால் சூழப்பட்ட 418 அடுக்குமனைகளை இது கொண்டுள்ளது. ஜா-எலவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இந்த நிர்மாணச் செயற்திட்டமானது, துறைமுகத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையூடாக கொழும்பிற்கு இலகுவான போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், சுப்பர்மார்க்கெட்டுக்கள், வங்கிகள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை மிக அருகில் கொண்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் சமூகத்துடன் ஒன்றித்த வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள VIMAN செயற்திட்டம், வெளிப்புற விளையாட்டுத் திடல், சிறுவர்கள் விளையாடும் பகுதி, சைக்கிளோட்டம் நடைப்பயிற்சிக்கான இட வசதி, பச்சைப்பசேலென தோற்றமளிக்கும் மத்திய பூந்தோட்டம் மற்றும் பல வசதிகள் அடங்கலாக 15 க்கும் மேற்பட்ட வாழ்க்கைமுறை வசதிகளைக் கொண்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் மதிப்பு மற்றும் சூழல் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சூரிய எரிசக்தி வசதியுடன் எரிசக்தித் திறன் கொண்ட இல்லங்கள் போன்ற நிலைபேற்றியல் சார்ந்த சிறப்பம்சங்களையும் இச்செயற்திட்டம் ஒருங்கிணைத்துள்ளது.
மேம்பட்ட வாழ்க்கை அனுபவத்தை வழங்கி, தரமான இல்லங்களை இலகுவில் பெற்றுக்கொள்ள வழிவகுத்து, வாழ்வுகளை வளப்படுத்துவதில் தமக்கிடையில் பகிர்ந்துகொண்டுள்ள அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மையின் மூலமாக, செலான் வங்கி மற்றும் John Keells Properties ஆகியன மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. VIMAN Ja-Ela மற்றும் கிடைக்கப்பெறுகின்ற கடன் திட்டங்கள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு, 0706 068 068 என்ற இலக்கத்தினூடாக John Keells Properties நிறுவனத்தை தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
VIMAN by John Keells Properties தொடர்பான விபரங்கள்
“Creating New Worlds” (புதிய உலகங்களைத் தோற்றுவித்தல்) என்ற John Keells Properties நிறுவனத்தின் நோக்குடன், ஆறு ஏக்கர் நிலப்பரப்பில், 60% பங்கானது திறந்தவெளி வசதிகளைக் கொண்டதாக, மிகவும் கவனமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட VIMAN Ja-Ela ஆனது 418 அடுக்குமனைகளைக் கொண்டுள்ளது. துடிதுடிப்பான ஜா-எல நகரத்தின் மத்தியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள VIMAN, கொழும்பு கோட்டைக்குச் செல்லும் நெடுஞ்சாலைக்கு விரைவாகச் செல்லும் வீதி மார்க்கத்துடன், ஜா-எல மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் 30 நிமிடத்தில் பிரயாணம் செய்வதையும் உறுதி செய்கின்றது. பச்சைப்பசேல் பின்னணிகள் மற்றும் மத்திய பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ள VIMAN Ja-Ela ஆனது, சிறுவர்கள் விளையாடும் பகுதி, வெளிப்புற விளையாட்டுத் திடல், சைக்கிளோட்ட/நடைப்பயிற்சித் தடம் உள்ளிட்ட 10 வகையான, கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள வசதிகளுடன், குடும்பங்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கு உகந்த சூழலுடன், குடியிருப்பாளர்கள் புத்துணர்வையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பதற்கான அமைதியான சரணாலயத்தைத் தோற்றுவிக்கின்றது.

