செய்திகள்
கொழும்பில் ஆட்சியமைக்க தபால் பெட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு

May 23, 2025 - 06:27 AM -

0

கொழும்பில் ஆட்சியமைக்க தபால் பெட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கு, தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தீர்மானித்துள்ளது. 

இந்தக் கட்சியின் இன்று (22) கூடிய செயற்குழு இந்த முடிவை எடுத்ததாக கட்சித் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமது கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்ததாக கூறினார். 

எனினும், கொழும்பு மாநகர சபையில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய தமது கட்சி விரும்புவதாகவும், அதனால் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05