செய்திகள்
72வது உலக அழகி போட்டி - இறுதிச் சுற்றில் அனுதி

May 23, 2025 - 07:35 AM -

0

72வது உலக அழகி போட்டி - இறுதிச் சுற்றில் அனுதி

இந்தியாவின் தெலங்கானாவில் இந் நாட்களில் நடைபெற்று வரும் 72வது 'உலக அழகி போட்டியில்' Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார். 

இதன்படி, தற்போது இவர் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தேர்வாகியுள்ளார். 

இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், அனுதியின் இந்த முன்னேற்றம் உலக அழகி போட்டியில் இலங்கைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக கருதப்படுகிறது. 

அதாவது, 74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார். 

மேலும், அனுதியின் மற்றொரு தனித்துவமான வெற்றியாக, இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அனுதி பங்கேற்கும் Head-to-Head Challenge பிரிவின் இறுதி 20 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05