May 23, 2025 - 03:37 PM -
0
கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.
நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்.
இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என உத்தரவு விடுத்துள்ளது.
மனு மீதான விசாரணையின் போது இருதரப்பும் அமைதியாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.