செய்திகள்
பிரதி அமைச்சரை சந்தித்த மூடப்பட்ட NEXT ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்

May 23, 2025 - 06:40 PM -

0

பிரதி அமைச்சரை சந்தித்த மூடப்பட்ட NEXT ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்

மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றொரு கலந்துரையாடல் இன்று (23) தொழில் அமைச்சில் நடைபெற்றது. 

இதன்போது, நேற்று முன்வைக்கப்பட்ட நிர்வாகத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிற்சாலையின் தொழிற்சங்கங்களுக்கு இன்று அறிவித்தார். 

எனினும், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலையை திடீரென மூட எடுத்த முடிவை ஏற்க முடியாது எனவும், அது நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் முன்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும் பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தினர். 

மேலும், எவ்வாறாவது தங்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர். 

அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு நிர்வாகத்திடம் தாமும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05