கிழக்கு
அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான சந்தேகநபர் கைது

May 24, 2025 - 09:54 AM -

0

அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான சந்தேகநபர் கைது

அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பாறை நகரில் நேற்று (23) 40 கொக்கேன் போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் நடமாடிய சந்தேக நபரை விசேட சோதனை நடவடிக்கையின் போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதைப்பொருளைப்கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி அசேல கே. ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05