சினிமா
இயக்குனர் ஷங்கருடனான அனுபவம் மோசமானது

May 24, 2025 - 05:30 PM -

0

இயக்குனர் ஷங்கருடனான அனுபவம் மோசமானது

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. 

ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் இசையை எஸ்.தமன் மேற்கொண்டுள்ளார். 

படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கேம் சேஞ்சர் படத்தில் வேலைப்பார்த்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் " கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நேரளவு முதலில் 7.5 மணி நேரமாக இருந்தது. அதை கொடுத்து ஷங்கர் சார் ஒரு திரைப்படத்திற்கான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். 

நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அதில் வேலை செய்ய முடியவில்லை அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதனால் அவருடன் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசம்" என கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05