செய்திகள்
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

May 24, 2025 - 07:27 PM -

0

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. 

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அதே நேரத்தில், கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். 

எனவே மீனவர்களும் கடல்சார் சமூகத்தினரும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05