உலகம்
9ஆவது குழந்தைக்கு தந்தையானார் போரிஸ் ஜோன்சன்

May 26, 2025 - 06:58 AM -

0

9ஆவது குழந்தைக்கு தந்தையானார் போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (60). கொரோனா ஊரடங்கின் போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு விருந்து கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது. 

கடந்த 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி (38) என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், போரிஸ் ஜோன்சன்-கேரி தம்பதிக்கு 4ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். 'பாப்பி' என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜோன்சனுக்கு 9ஆவது குழந்தை என கூறப்படுகிறது. 

போரிஸ் ஜோன்சனுக்கு கேரியுடன் பிறந்த குழந்தைகள் தவிர முதல் மனைவியுடன் ஒரு குழந்தை, 2ஆவது மனைவியுடன் 4 குழந்தைகள் என ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது கேரியுடனான 4ஆவது குழந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து 3 மனைவிகளுடன் 9 குழந்தைகளுக்கு போரிஸ் ஜோன்சன் தந்தையாகி உள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05