செய்திகள்
வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

May 26, 2025 - 07:43 AM -

0

வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

பிங்கிரியவில் உள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இது தொடர்பில் வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி லால் குமாரவிடம் அத தெரண வினவியபோது, ​​கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் சமீபத்தில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். 

மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அதன்படி, மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05