May 26, 2025 - 09:59 AM -
0
மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடிகை மாலினியின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை இன்று (26) பிற்பகல் அரச அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்து கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.

