வடக்கு
உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமானம்!

May 27, 2025 - 04:05 PM -

0

உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமானம்!

தேசியமக்கள் சக்தியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (27) இடம்பெற்றது.

 

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

 

குறித்த நிகழ்வு கூட்டுறவுபிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

 

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தேசியமக்கள் சக்திக்கு வவுனியாவில் உள்ள சபைகளில் 26 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05