May 28, 2025 - 12:28 PM -
0
தெரண ஊடக வலையமைப்பின் Derana Macroentertainment இன் கீழ் இயங்கும் 'கெஸ்ம' குழுவினால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த “Maliban Presents கெஸ்ம வெட அல்லன அவுருத்த” அண்மையில் மரதான பிலிப் குணவர்த்தன மைதானத்தில் நடைபெற்றது.
கொழும்பு நகரை அழகுபடுத்தும் தூய்மை பணியில் ஈடுபடும் 150ற்கும் மேற்பட்ட நண்பர்கள் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அன்றைய நாள் புறாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பணிஸ் சாப்பிடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், அதிர்ஷ்ட முட்டி உடைத்தல், சங்கீத கதிரை, நண்பணுக்கு தயிர் ஊட்டுதல், புத்தாண்டு இளவரசன் மற்றும் இளவரசி ஆகிய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
இங்கே கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு Maliban நிறுவனத்தால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.