May 28, 2025 - 12:44 PM -
0
70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
உரிய குடும்பங்களுக்கு சொந்தமான அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இன்று (28) இந்த உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 592,766 பயனாளிகளுக்கு ரூ. 2,963,830,000 தொகை உரிய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

