May 28, 2025 - 10:34 PM -
0
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரிகள் தொடர்பாக, மற்றொரு கலந்துரையாடல் இன்று (28) வொஷிங்டனில் நடைபெறுகிறது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வொஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளது.

