விளையாட்டு
ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி

May 29, 2025 - 09:27 AM -

0

ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நார்த் லண்டன் சிசி அணி 426 ஓட்டங்களை எடுத்த நிலையில், 427 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ரிச்மேண்ட் சிசி அணி வெறும் 2 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்பது, கிரிக்கெட் வரலாற்றில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில், நார்த் லண்டன் சிசி என்ற அணி முதலில் துடுப்பெடுத்தாடி 45 ஓவர்களுக்கு 426 ஓட்டங்களை எடுத்தது. இதனை அடுத்து, 427 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ரிச்மேண்ட் சிசி என்ற அணி, இலக்கை எட்ட முடியாததுமட்டுமின்றி, வெறும் 2 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகியது.

அதில் ஒரு ஓட்டங்கள் மட்டுமே ஓடி எடுத்துள்ளனர் என்பதும், மீதி ஒரு ஓட்டங்ள் (Wide ball) மூலம் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நார்த் லண்டன் சிசி அணியின் மேட்ரோசன் என்ற வீரர், மூன்று ஓவர்கள் வீசி, ஒரு ஓட்டங்கள் எதுவும் கூட கொடுக்காமல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிக்கெட் போட்டி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05