May 29, 2025 - 02:59 PM -
0
Samsung Sri Lanka அதன் விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ் கவர்ச்சிகரமான தவணைக் கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை மேம்படுத்தி புத்தாண்டை புத்தாக்கத்துடனும், நாகரீகத்துடனும் வரவேற்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, Samsung இன் உயர்தர Galaxy S Series தொடர் சாதனங்கள் தற்போது கணிசமான தள்ளுபடிகளுடன் கிடைக்கின்றன.
Samsung நிறுவனம் அதன் சக்திவாய்ந்த செயல்திறன், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்தர புகைப்பட அம்சங்களைக் கொண்ட புதிய Galaxy S25 வரிசைக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதன் உயர்நிலை சாதனமான Galaxy S25 Ultra (12GB + 512GB) தற்போது ரூ. 518,545 விலையில் கிடைக்கிறது. 100,000 ரூபா முன்பணம் செலுத்தி, வாடிக்கையாளர்கள் மாதம் ரூ. 25,793 என்ற குறைந்த தவணையில் 24 மாதங்களுக்கு இச்சாதனத்தைப் பெறலாம்.
Galaxy S Series தொடரின் அனைத்து மாதிரிகளும் வசதியான தவணை முறையில் கிடைக்கின்றன. உயர்நிலை Galaxy S25 Ultra (12GB + 256GB) ரூ. 474,726 விலையில் கிடைக்கிறது, ரூ. 100,000 முன்பணம் செலுத்தி மாதம் ரூ. 23,112 தவணையில் இதைப் பெறலாம். Galaxy S25+ (12GB + 256GB) ரூ. 365,272 விலையில் கிடைக்கிறது, அதே முன்பணத்துடன் மாதம் ரூ. 16,384 தவணையில் கிடைக்கும். சிறிய ஆனால் சக்திவாய்ந்த முன்னணி சாதனமான Galaxy S25 (12GB + 256GB) ரூ. 295,999 விலையில், ரூ. 100,000 முன்பணத்துடன் மாதம் ரூ. 12,115 தவணையில் வாங்கலாம்.
Samsung றுவனம் பல்வேறு தவணைக் கட்டணத் தேர்வுகளை (3, 6, 9, 12, 15, 18, மற்றும் 24 மாதங்கள்) வழங்குகிறது. இது அடுத்த தலைமுறை Samsung உயர்தர சாதனங்களை வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது. இந்த சலுகைகள் Samsung இன் இதுவரை இருந்த மிகப்பெரிய பண்டிகைக் கால சலுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இலங்கை முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனையாளர் கடைகளிலும் இந்த வரையறுக்கப்பட்ட பண்டிகைக் கால சலுகைத் திட்டம் கிடைக்கிறது.
‘Snap Pay’ என்று அழைக்கப்படும் இந்த எளிய கட்டணத் திட்டம், Fintrex Finance நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த Galaxy சாதனங்களை எளிதாக வாங்க உதவுகிறது. 3 முதல் 24 மாதங்கள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தேர்வுகளுடன், பாவனையாளர்கள் 12 மாதங்களுக்கு வெறும் ரூ. 2,370 போன்ற குறைந்த மாதாந்த தவணைகளில் செலுத்தலாம். இந்தத் திட்டம் இலங்கை முழுவதும் உள்ள Samsung இன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமும் கிடைக்கிறது.
இந்த கூட்டாண்மை குறித்து Fintrex Finance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜயதிலக பண்டார கருத்து தெரிவிக்கையில், ' Snap Pay திட்டம் மூலம் Fintrex Mobile கடன் தொடர்பாக Samsung Sri Lanka உடனான எங்கள் ஒத்துழைப்பு, இன்றைய வாடிக்கையாளருக்கு சிறந்த நிதி தேர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. Snap Pay திட்டம் மூலம் Fintrex Mobile கடனுடன், நாங்கள் வெறும் ஒரு கட்டணத் திட்டத்தை மட்டும் வழங்கவில்லை. இலங்கையர்கள் தங்கள் நிதியை பொறுப்பான மற்றும் வசதியான முறையில் நிர்வகிக்கும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை அனுபவிக்க நாங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்று கூறினார்.
Galaxy S25 தொடர் சமீபத்திய Galaxy AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இது அன்றாட பணிகளை எளிதாக்குகிறது. முக்கிய அம்சங்களில் அழைப்புகளின் போது நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்கும் Live Translate எளிய சைகை மூலம் திரையில் எதையும் தேட உதவும் Circle to Search with Google மற்றும் குறிப்புகளை சுருக்கி, வடிவமைக்கும் Note Assist ஆகியவை அடங்கும். துறையின் முன்னணி செயலிகள், உயர்-புதுப்பிப்பு திரைகள் (high- refresh displays) மற்றும் அடுத்த தலைமுறை கேமராக்களுடன் இந்த சாதனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் பொழுதுபோக்கிற்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.
இந்த பிரச்சாரத்தின் ஆரம்பம் குறித்து Samsung Sri Lanka வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு விலை குறைவாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அதனால்தான் எங்களின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நுண்ணறிவு கொண்ட சாதனங்களை இதுவரை இல்லாத அளவிற்கு அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். Galaxy S25 தொடர் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அம்சங்களில் இருந்து உலகத்தரம் வாய்ந்த கேமரா அமைப்புகள் வரை Samsung இன் சிறந்த கண்டுபிடிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் இந்த தவணைக் கட்டணத் திட்டங்களுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் அந்த சிறப்பை அனுபவிப்பதை நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம் என்றார்.
விலைக்கழிவுகளுக்கு மேலாக, வாடிக்கையாளர்கள் முன்னணி நிதி நிறுவனங்கள் மூலம் எளிய மாதாந்த தவணை தேர்வுகளைப் பெறலாம். இது நிதி சிரமம் இல்லாமல் விரும்பிய சாதனத்தை வாங்க உதவுகிறது. மேலும், Samsung ஒவ்வொரு Galaxy S தொடர் வாங்குதலுடனும் சிறப்பு தொகுப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உத்தரவாதமான பரிசுகளை வழங்குகிறது. இது ஷாப்பிங் அனுபவத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கிறது.
Galaxy S தொடர் எப்போதும் உயர்தர வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக இருந்து வந்துள்ளது. Galaxy S25 வரிசையில், Samsung சாதனத்திலேயே உள்ள நுண்ணறிவு, நீண்டகால பேட்டரி ஆயுள், உறுதியான பொருட்கள் மற்றும் சக்திவாய்ந்த மென்பொருள் புதுப்பிப்புகளை இணைத்துள்ளது. இது ஒவ்வொரு சாதனமும் எதிர்காலத்திலும், நவீனமாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது.
பாவனையாளர்கள் Samsung Members செயலியைப் பதிவிறக்கம் செய்து, உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளைக் கண்டறியலாம். இவற்றை ழுபுகு வணிக வளாகத்தில் உள்ள Samsung Members மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் நம்பர் 1 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி வர்த்தகநாமமான Samsung, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மிகவும் விரும்பப்படும் மின்னணு வர்த்தகநாமம் எனவும், நான்கு ஆண்டுகளாக மக்களின் இளைஞர் தேர்வு வர்த்தகநாமம் எனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், Gen Z மற்றும் millennial தலைமுறையினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் Samsung உறுதியாக உள்ளது.