May 29, 2025 - 04:36 PM -
0
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (29) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது ஹல்லோலுவவும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் வாகனத்தில் பயணித்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப் வாகனத்தை வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

