செய்திகள்
கடற்படையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து வௌியான தகவல்

May 29, 2025 - 06:35 PM -

0

 கடற்படையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து வௌியான தகவல்

2025 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, பலநாள் மீன்பிடி படகுகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய இந்த பாரியளவிலான தேடுதல் நடவடிக்கைகளின்போது, 542 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,216 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இதன்போது, 4 பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் 22 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்த சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05