செய்திகள்
இலங்கை அணிக்கு மற்றுமொரு வெங்கலப் பதக்கம்

May 29, 2025 - 08:33 PM -

0

இலங்கை அணிக்கு மற்றுமொரு வெங்கலப் பதக்கம்

26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 400x4 மீற்றர் தொடர் ஓட்ட போட்டியில் இலங்கை அணி இன்று (29) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

இதன் மூலம், 26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது வெண்கலப் பதக்கமாக இது அமைந்துள்ளது. 

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நதீஷா ராமநாயக்க, சயூரி மெந்திஸ், ஜயேஷி உத்தரா மற்றும் நிஷேந்திரா பெர்ணான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதிச் சுற்றில், இலங்கையின் நிஷேந்திரா பெர்ணான்டோ ஒரு கட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இருப்பினும், கடைசி 200 மீற்றர்களில் தங்கப் பதக்கம் கைநழுவிப் போனாலும், இலங்கை அணி மூன்றாவது இடத்தை உறுதி செய்து, போட்டியை வெற்றிகரமாக முடித்தது. 

இதன்படி, இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்த நிலையில், போட்டியை முடித்த நேரம் 3 நிமிடங்கள், 36.67 வினாடிகளாக பதிவாகியது. 

இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது, வெள்ளிப் பதக்கத்தை வியட்நாம் கைப்பற்றியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05