செய்திகள்
டொனால்ட் டிரம்பிற்கு மீண்டும் கிடைத்த அனுமதி

May 30, 2025 - 07:53 AM -

0

டொனால்ட் டிரம்பிற்கு மீண்டும் கிடைத்த அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி கட்டண உத்தரவுகளை தற்காலிகமாக மீண்டும் அமல்படுத்த அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, இந்த அவசர அதிகாரச் சட்டத்தின் கீழ் பரஸ்பர வரி கட்டணங்களை தொடர்ந்து வசூலிக்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இந்த கட்டணங்களை நிறுத்துவதற்கான உத்தரவு அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தால் நேற்று (29) வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த உத்தரவை வழங்கிய வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க அரசியலமைப்பு மூலம் காங்கிரஸுக்கு மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பிரத்யேக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. 

இதன் காரணமாக, அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்க ஜனாதிபதியின் அவசர அதிகாரங்கள் மூலம் அந்த அதிகாரத்தை மீற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

வெள்ளை மாளிகையால் செயல்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு ஒவ்வொரு நாட்டிற்கும் பரஸ்பர கட்டணங்களை விதிக்க ஒருதலைப்படுத்தப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை என்று மூன்று நீதிபதிகள் கொண்ட குழு மேலும் தீர்ப்பளித்தது. 

எனினும், டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05