விளையாட்டு
ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பியின் மகத்தான சாதனை!

May 30, 2025 - 10:56 AM -

0

ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பியின் மகத்தான சாதனை!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மகத்தான சாதனையை படைத்துள்ளது. 

நேற்று இடம்பெற்று முதலாவது தகுதி சுற்றுப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. 

போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பஞ்சாப் அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

அதன்படி, 102 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 10 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

பெங்களுர் அணி சார்பில் பில் சால்ட் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். 

இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 60 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியில் அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா 57 பந்துகள் மீதம் வைத்து வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. 

தற்போது அதனை முறியடித்துள்ள பெங்களூரு புதிய சாதனை படைத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05