சினிமா
நடிகை சாய் பல்லவியா இது..? தீயாய் பரவும் புகைப்படம்!

May 30, 2025 - 11:53 AM -

0

நடிகை சாய் பல்லவியா இது..? தீயாய் பரவும் புகைப்படம்!

கடந்த சில தினங்களாக நடிகை சாய் பல்லவியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த புகைப்படம், அவரது முந்தைய கருத்துகளுக்கு எதிராக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாய் பல்லவி, “அரைகுறை ஆடைகளை அணிய மாட்டேன். புடவையில் கூட கவர்ச்சியை வெளிப்படுத்த முடியும். 20 ஆண்டுகள் கழித்து என் குடும்பத்துடன் என் படங்களைப் பார்க்கும்போது பெருமையாக உணர விரும்புகிறேன்,” என தெரிவித்திருந்தார். 


ஆனால், தற்போது வைரலாகும் இந்த புகைப்படம் அவரது கூற்றுக்கு முரணாக இருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் வாதிடுகின்றனர். 

இது சாய் பல்லவியாக இருக்க முடியாது என்றும், புகைப்படம் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். மறுபுறம், இது சாய் பல்லவியின் புகைப்படமே என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர். 

இந்த புகைப்படம், 2025 பெப்ரவரியில் வெளியான ‘தண்டேல்’ படத்தில் உள்ள “நமோ நம: ஷிவாய” பாடலின் காட்சியாக இருக்கலாம் என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவி இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05