May 30, 2025 - 12:15 PM -
0
இலங்கையின் கட்டடத் துறையில் பழுதுபார்த்தல், மெருகூட்டுதல், அழகாக்கம் செய்தலுக்கான நம்பிக்கையான பெயரான Swisstek Ceylon PLC நிறுவனம், வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியுடன் இணைந்து, தனது தாக்கம் மிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தி, மஹியங்கனையிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில், சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான “Swisstek Perfect Spark Mentoring Camp” எனும் முதன்மையான அடித்தள ரக்பி அபிவிருத்தி முகாம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
“For the Perfect Finish” எனும் வாக்குறுதியை உறுதியாக நிலைநிறுத்தும் Swisstek நிறுவனம், தரமான உற்பத்திகள் மற்றும் சிறந்த மெருகூட்டலுடனான இறுதி முடிவுகளை வழங்குவதில் பெயர் பெற்று விளங்குகின்றது. தமது வெற்றிக்கு ஆதரவளித்த சமூகத்தின் பங்களிப்பை மதிக்கும் Swisstek, தம்மை வளர்த்த சமூகத்திற்குத் திருப்பி வழங்க வேண்டிய நேரம் இது என்று நம்புகிறது. சரியான சமுதாயம் உருவாக வேண்டும் எனும் நோக்கத்திற்கு அமைய, இளைய தலைமுறையினரை வலுவூட்டுதல் அவசியம் என்பதை Swisstek நன்கு உணர்ந்துள்ளது. இதனை அடையும் பொருட்டு, ஒழுக்கம், ஒத்துழைப்பு, மனோவலிமை போன்ற முக்கியமான பண்புகளை வளர்க்கும் சக்திவாய்ந்த கருவியாக விளையாட்டு அமைகின்றது என்பதை Swisstek காண்கிறது. இது நாளைய தலைவர்களாக இளைஞர்களை உருவாக்க உதவுகிறது.
இந்த சமூகத்தை மையமாகக் கொண்ட முயற்சியின் ஒரு அங்கமாக, வித்தியார்த்த கல்லூரியின் முழுமையான ரக்பி அணியும் அவர்களது பயிற்சியாளர்களும் இணைந்து 5 பிராந்திய பாடசாலைகளின் மாணவர்களுக்கான முழுமையான பயிற்சி முகாமை முன்னெடுத்திருந்தது. இதில் ப/ தெஹிகொல்ல மஹா வித்தியாலயம், ப/ மஹியங்கனை தேசிய பாடசாலை, தம்பராவ மஹா வித்தியாலயம், ஹத்தத்தாவ இடைநிலை பாடசாலை, ஒறுபெந்திவெவ இடைநிலை பாடசாலை ஆகிய பாடசாலைகளே இதில் பங்குபற்றியிருந்தன. பிரபல பயிற்சியாளர் நில்பர் இப்ராஹிம் மற்றும் வித்தியார்த்த கல்லூரி பயிற்சி குழுவினர் தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்கினர். வித்தியார்த்த கல்லூரி மாணவர்கள் இதில் நேரடியாக பங்கேற்று, 100 இற்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுடன் தங்களது அனுபவங்களை மிக ஆவலுடன் பகிர்ந்து கொண்டனர். இது பாடசாலைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கியது.
பயிற்சியாளர் நில்பர் இப்ராஹிம் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: “இந்த நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதிலும், மஹியங்கனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் சேர்ந்த இளம் வீரர்களுடன் எமது அறிவை பகிர்ந்துகொள்வதிலும் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நாம் பெருமையடைகிறோம். இது ஒரு நாளாக இருப்பினும் கூட அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது என நாம் உணர்ந்தோம். அவர்களின் உற்சாகமும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் எம்மை மெய்மறக்க வைத்தது.” என்றார்.
பொதுவாக பாடசாலைகள் எதிர்கொள்ளும் அத்தியாவசிய வளங்களின் பற்றாக்குறையைப் புரிந்துகொண்டு, இந்த முகாமில் பங்கேற்ற பாடசாலைகளுக்கு தேவையான ரக்பி உபகரணங்கள் Swisstek நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டன. இது இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் என்பதுடன் ஒழுக்கமுள்ள மற்றும் முழுமையான மனிதர்களாக அவர்களை வளர்க்க விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்துவதிலான Swisstek நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த முயற்சியானது, Swisstek நிறுவனத்தின் வித்யார்த்த கல்லூரியுடனான தொடர்ச்சியான கூட்டாண்மையின் ஒரு பிரதிபலிப்பாகும். இது வெறுமனே ஒரு அனுசரணையை வழங்குவதால் மட்டும் இயக்கப்படுவதில்லை, மாறாக அர்த்தமுள்ள சமூகத் தாக்கத்தை உருவாக்கும் ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கினால் இயக்கப்படுகிறது.
இந்த முயற்சி குறித்து Swisstek Ceylon PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிந்த பெரேரா கூறுகையில், “இந்த திட்டமானது, நாம் வெறுமனே அனுசரணையாளர் அல்லாமல், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் உந்துசக்தியாக செயற்படுவதற்கான உறுதியை எடுத்துக் காட்டுகிறது. வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியின் பயணத்தில் மாத்திரமன்றி, பெரிய கனவுகளை கொண்ட ஏனைய இளம் வீரர்களின் வாழ்விலும் ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். ‘For the Perfect Finish’ எனும் எமது வர்த்தகநாம வாக்குறுதியை, எமக்கு கிடைக்கும் இடங்களில் மாத்திரமல்லாமல், இலங்கையின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்குடன் சரியான நோக்கம் கொண்ட கூட்டாண்மைகள் மூலம் நாம் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறோம். இது ஒரேயொரு நிகழ்வு அல்லாமல், பல நிகழ்வுகளுக்கான ஆரம்பமாகும். வித்தியார்த்த கல்லூரியுடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பாடசாலை விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்க நாம் முடிவெடுத்துள்ளோம். இதில் ரக்பியைத் தவிர, கிரிக்கெட், கைப்பந்து போன்ற ஏனைய விளையாட்டுகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.